ஜனவரி 07, ஊட்டி (Nilgiris News): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, இன்னும் சில வாரங்களில் தனது இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. கடந்த ஆண்டை விடவும், 2024ல் பல மாவட்டங்கள் நல்ல மழையை எதிர்கொண்டுள்ளது. தற்போது மார்கழி, தை மாதம் தொடங்கியுள்ள காரணத்தால், பனிப்பொழிவு அதிகரிக்கிறது. குறிப்பாக இனி வரும் நாட்களில் அதிகாலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உறைபனியின் தாக்கத்தால் மீண்டும் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. AR Rahman: ஆஸ்கர் நாயகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.. நன்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்..!
உறைபனிப்பொழிவால் மகிழ்ச்சியில் மக்கள்:
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று, ஊட்டி உட்பட புறநகர் பகுதிகளிலும் உறைபனி தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை நல்ல பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் புற்களில் இருந்த நீர் அனைத்தும் உறைந்து பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி தந்தது. உறை பனியின் தாக்கத்தால் மலர்கள், புல்வெளி பாதிக்காமல் இருக்க, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்களுக்கு போர்வையும் புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியும் நடந்து வருகிறது.
ஊட்டியில் வெண்மையாக காட்சியளிக்கும் புல் மைதானங்கள்:
#WATCH | Tamil Nadu: The hill town of Ooty in the Nilgiris District witnesses extreme cold conditions as a layer of frost forms on surfaces. pic.twitter.com/N8YJrMIBO0
— ANI (@ANI) January 7, 2025