அக்டோபர் 14, சென்னை (Agriculture Tips): ஒட்டுண்ணிகளும் பூச்சிகளும் கால்நடைகளின் உற்பத்தி திறனை பாதிப்பதோடு நில்லாமல், அவை நோய்வாய்ப்படவும் காரணமாகின்றன. புழுக்கள் கால்நடைகளில் ஊட்டச்சத்தினை உறிஞ்சிவதால் வளர்ச்சி குறைபாடு, கழிச்சல், தளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, போன்றவையோடு சில நேரங்களில் இறப்பு கூட ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உண்ணிகள் மற்றும் பூச்சிகளை எந்த அளவுக்கு கட்டுக்குள் வைக்கிறோமோ, அந்த அளவுக்கு கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும், உற்பத்தி திறனும் மேம்படும். Kollu Rice Recipe: சத்தான கொள்ளு சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
உண்ணிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- புதிதாக வாங்கப்பட்ட கால்நடைகளானால், அவற்றுக்கு உண்ணி நீக்கம் செய்த பின்னரே மற்ற கால்நடைகளுடன் சேர்க்க வேண்டும்.
- ஒரு உண்ணி தோராயமாக 3000 முட்டைகள் இடும். மேலும், 2 முதல் 7 மாதம் வரை உணவு இல்லாமல் உயிர்வாழக் கூடியவை. அதனால் கொட்டகையின் சுற்றுப்புறம், மூலை, சுவரின் விரிசல், தரை மற்றும் கால்நடைகளின் மீதும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து விட்டு, உண்ணிகள் பெருகுவதை தடுக்கலாம்.
- பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான அளவில் உபயோகிக்க வேண்டும்.
- ஏற்கனவே உபயோகிக்கும் மருந்தையும், அதற்கு இணையான வேறு மருந்தையும் மாற்றி மாற்றி உபயோகிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட இடைவெளியில், உண்ணி நீக்க மருந்துகளை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி, சரியான விகிதத்தில் தெளித்து வர வேண்டும்.
பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- சாணம் மற்றும் கோமியத்தை கொட்டகையிலிருந்து சுத்தம் செய்து, குறிப்பிட்ட தூரத்தில் அப்புறப்படுத்த வேண்டும்.
- கொட்டகைக்குள் சரியான வடிகால் வசதி அமைத்து, கழிவுநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- இரவு நேரத்தில் வேப்பிலையை கொண்டு புகைமூட்டம் ஏற்படுத்துவதால், பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
- வேப்பெண்ணெயை கால்நடைகளின் மீது தடவி, பூச்சிகளிடமிருந்து அவற்றை காக்கலாம். வேப்பெண்ணை எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
- வேப்பெண்ணெயை கால்நடைகளின் வயிற்றின் அடிப்பகுதி, மற்றும் கால் என முடி உள்ள எதிர் திசையிலும் தடவ வேண்டும். அவற்றின் உடல் முழுதும் தடவவும் மறக்காதீர்கள்.