டிசம்பர் 23, சென்னை (Parenting Tips): புது வருடம் ஆரம்பிக்கிறது. வருடா வருடத்திலிருந்து இந்த ஆண்டு சற்று தனித்துவமாக இருக்கப் போகிறது, காரணம் 2012 ல் பிறந்த குழந்தைகள் தங்கள் பதின்ம (teenage) பருவத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார்கள். குழந்தைகள் பதின்ம பருவம் அடைந்துவிட்டாலே பெற்றோருக்கு பயம் வர ஆரம்பித்து விடும். அதிலும் தற்போது இருக்கும் குழந்தைகள் அசுரவளர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.
ஆனால் இனி வளரும் குழந்தைகள் பற்றிய பயம் அவசியமற்றது. இக்கால குழந்தைகளின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சியில் சிறந்து இருக்கிறார்கள். பெற்றோருக்கு தெரியாத விஷயத்தை கூட கற்றுக் கொடுக்கிறார்கள். நாம் அறிவதற்கு முன்பே அவர்களுக்கு செய்திகள் சென்றடைகிறது. இதற்காக பழைய காலத்தில் உள்ளது போல் அடித்து திருத்தவேண்டும் இனி தான் அதிக கவனிப்புடன் குழந்தையை கண்காணிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அவர்களாகவே அனைத்தும் கற்று வளருவார்கள். அவர்களுக்கு சரி எது தவறு எது என்று கூறினாலே போதும் அவர்களே சரியான முடிவைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு இவ்வயதில் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான ஒன்று முடிவெடுக்கும் திறன். தவறு செய்தால் முன்பு போல் அடித்து உதைத்து வளர்த்தால் தான் ஒழுக்கமாக இருப்பார்கள் என்று நினைப்பது தான் முட்டாள் தனம். Kathirikai Mor Curry Recipe: கத்திரிக்காய் மோர் கறி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
பதின்மவயது குழந்தைகளுக்குத் தேவையானவை:
2012ல் பிறந்து டீனேஜராக காலடி எடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுங்கள்.படிப்பில் ஆர்வம் இல்லை என்றால் அவர்களுக்கு அதில் ஆர்வமோ அந்த வகுப்புகளில் சேர்த்துவிடுங்கள். முதலில் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்குமாறு நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அனைவரையும் மதிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். தவறு செய்தால் அதை பொறுமையாக புரிய வையுங்கள். எதற்கெடுத்தாலும் குழந்தைகளை அடித்தால் பெற்றோர்கள் எப்போதும் இப்படி தான் என்று மீண்டும் அந்த தவற்றை தான் செய்வார்கள். எப்போதும் கடுமையாக இல்லாமல் நண்பர்கள் போல இருங்கள். அவர்களுக்கான சுதந்திரத்தை அளியுங்கள். எப்போதும் உங்கள் சொல்பேச்சை மட்டும் தான் கேட்க வேண்டும், நீங்கள் சேர்த்துவிடும் வகுப்புகளுக்கெல்லாம் சென்று உங்களின் ஆசைக்கும் சேர்த்து படிக்க வேண்டும் என்று நினைப்பதை முதலில் விட்டுவிடுங்கள் அது அவர்களின் வாழ்க்கை என மனதில் கொள்ளுங்கள்.
நம் பெற்றோர் நமக்கு செய்த தவறை நம் குழந்தைகளுக்கு தர வேண்டாம். இவ்வயதில் அனைத்திலும் ஆர்வர் சற்று அதிகமாகவே இருக்கும். வெளிப்படையாக குழந்தைகளிடம் உரையாடுங்கள். இந்த உலகத்தில் வளர்ந்த பின் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் பல விஷயங்கள் இருக்கிறது என எடுத்துக் கூறுங்கள். இவ்வயதில் தான் கெட்டப்பழக்கங்களும் அழைக்கும் தெரிந்து கொள்வதில் தவறில்லை ஆனால் இது அதற்கு சரியான வயதில்லை என்று பொறுமையாக எடுத்துக் கூறி புரிய வையுங்கள். நீங்கள் குழந்தைகளை இவ்வயதில் எவ்வாறு நடத்துகிறீர்களோ அது போல அவர்களின் வாழ்க்கை அமையும் என்பதை மனதில் கொல்ளுங்கள். குழந்தைகள் தினம் தினம் தவறு செய்து கற்றுக்கொண்டுதான் இருப்பார்கள்.
தற்போதுள்ள டீனேஜர்கள் அனைவரும் கொரோனாவிற்கு பின்பு தனித் தனியாக மொபைல் வைத்துள்ளனர். அதனால் எளிதில் கெட்டப் பழக்கங்களை கற்றுக் கொள்வார்கள். அவ்வப்போது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்களா என கவனித்தாலே போதும். அவ்வாறு தெரிந்தால் அறிவுரை வழங்குங்கள்.