மே 15, சென்னை (Health Tips): யோகா செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்கி, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்புத் தன்மையை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், அழகான உடல் அமைப்பை பெறவும் வழிவகை செய்கிறது. இவை அனைத்தையும் விட யோகா (Yoga) மன அமைதியை முழுமையாக நமக்கு அளிக்கின்றது. இதனை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். இவ்வாறு, யோகாவை தினமும் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம்.
மன அமைதி: மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்து, யோசிக்கும் திறன் மற்றும் உருவாக்கும் திறன் ஆகியவற்றுக்கு சமநிலையை உருவாக்கும் தன்மை யோகாவிற்கு இருக்கின்றது. Dharmapuri Shocker: 15 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் கள்ளக்காதலன் குத்திக்கொலை; ஊசலாடும் காதலன் உயிர்..!
மன அழுத்தத்தை போக்கும்: யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தை நீக்கலாம். உடற்பயிற்சிகளாலும் மன அழுத்தத்தை போக்க முடியும்.
சீரான சுவாசம்: மூச்சு பயிற்சி செய்து வருவதன் மூலம் சீரான சுவாசத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களை சீர்படுத்தி, ஆழமான மூச்சு பயிற்சி உடல் வலிமையை கூட்டுகிறது.
வலி நிவாரணி: முதுகு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட யோகா சிறந்த வலி நிவாரணி ஆகும். இதனால் முதுகு தண்டுகளில் உள்ள பிடிப்புகளை போக்க முடியும்.
தன்னம்பிக்கை அளிக்கிறது: யோகாவை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். இதனால் உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த இயலும். மேலும், சிறந்த தூக்கத்தை தருகிறது. யோகா செய்வதால் தன்னம்பிகை மற்றும் சுய கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம்.