ஜூன் 24, சென்னை (Health Tips): நம் உடலுக்கு தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்து பெற காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இருக்கின்றன. அந்த வகையில் மனிதர்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சை பட்டாணி (Peas) இருக்கின்றது. பச்சை பட்டாணி (Pachai Pattani)சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வலுவான எலும்பு: மனிதர்களின் உடலுக்கு எலும்பு மிகவும் பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதைதொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மற்றும் இது சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
சரும பொலிவு: பச்சை பட்டாணியில் மெக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகின்றது. சருமம் பொலிவு பெறுகிறது.
நார்ச்சத்து: வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கின்றது. Bride Gun Shot Dead: மணப்பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை; முன்னாள் காதலன் வெறிச்செயல்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!
கொலஸ்ட்ரால்: பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கின்றது.
ரத்த சோகை: பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் பெருக்கத்தை தூண்டும் சத்துகள் அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
இதயம்: உடலில் ரத்தம் தடையின்றி சீராக செல்ல ரத்தத்தில் ஆன்டி – ஆக்சிடண்டுகள் அதிகம் தேவை. பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு இவை அதிகம் கிடைப்பதால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
வயிற்று புற்றுநோய்: புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் வயிற்றில் ஏற்படும் வயிற்று புற்று நோய் என்பது தற்காலத்தில் அதிகம் ஏற்படுகிறது. பச்சை பட்டாணியை தினமும் 2 மில்லிகிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அல்சைமர் நோய்: வயதாகும் நபர்களில் சிலருக்கு மூளை செல்கள் மிகவும் வலுவிழப்பதால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் உள்ளது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, மூளை செல்கள் புத்துணர்வு பெற்று, ஞாபகத் திறன் அதிகரித்து அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கும்.