White Pumpkin (Photo Credit: YouTube)

ஜூலை 06, சென்னை (Health Tips): பூசணிக்காய் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக, மஞ்சள் நிறத்தில் உள்ள பூசணிக்காயை தான் கூறுவார்கள். பெரும்பாலும், வெண்பூசணி பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு தான். வெள்ளை பூசணிக்காயில் மாவு சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்துள்ளது. அந்த வகையில் வெண்பூசணிக்காய் (White Pumpkin) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்: வெள்ளை பூசணிக்காயில் (Venpoosani Benefits) அதிக அளவு பைட்டோஸ்டெரால்கள் அடங்கியுள்ளது. இந்த கலவைகள் கொலஸ்ட்ராலை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

ஆஸ்துமா பிரச்சனை: வெள்ளை பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சுவாச பிரச்சனையில் உள்ள நோய்களை சரிசெய்ய உதவுகிறது. இதனை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யலாம்.

கண் ஆரோக்கியம்: இதில் ஏராளமான லுடீன் ஜியாக்சாந்தின் என்ற கலவை உள்ளது. இவை பிரீ ரேடிகளிலுருந்து வரும் பாதிப்பிலுருந்து கண்களை பாதுகாக்கிறது. எனவே, வெண்பூசணியை உணவில் தவறாமல் எடுத்து கொள்வதன் மூலம், கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். Security Forces Soldier Died: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தாக்குதல்; ராணுவ வீரர் மரணம்..!

அல்சர் பிரச்சனை: செரிமான மண்டலத்தை சீராக செயல்படவும், வயிற்று புண் பிரச்சனையிலிருந்து விடுபடவும் வெள்ளை பூசணிக்காய் உதவி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: வெள்ளை பூசணி மற்றும் அதன் சாறு ஆகியவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க செய்கின்றது. இதனால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

புற்றுநோய் பிரச்சனை: வெண்பூசணி மற்றும் அதன் விதைகளில் அதிகளவு கரோட்டினாய்டுகள் மற்றும் துத்தநாகம் உள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிராக போராடுகின்றது.

மன அழுத்தத்தை போக்க: வெள்ளை பூசணிக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, பதற்றம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம்.