3 Dead Bodies in Home: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிந்த நிலையில் பிணமாக மீட்பு.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வீட்டில் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 15, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டம், காராமணி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதன் குமார். ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் (IT Company) பணியாற்றி வந்துள்ளார். இவரது மகன் நிஷாந்த் குமார் தனது பாட்டி கமலீஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். கடந்த ஜூலை 8-ஆம் தேதி அன்று சுதன் குமார், காராமணி குப்பத்திற்கு வந்துள்ளார். Policeman Arrested in Pocso: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; காவலர் போக்சோவில் கைது..!
இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டில் புகை நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், நெல்லிகுப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுதன் குமார், அவரது தாயார் கமலீஸ்வரி, மகன் நிஷாந்த் குமார் ஆகிய மூன்று பேரும் தனித்தனி அறைகளில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
மேலும், வீடு முழுவதுமாக ரத்தக்கறையாக பரவிக் கிடந்துள்ளது. இதனைக் கண்ட காவல்துறையினர், மூன்று பேரையும் யாரோ கொலை (Murder) செய்துவிட்டு அவர்களை எரித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 15, 2024 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

