ஜூன் 03, சென்னை (Health Tips): சப்போட்டா மிகவும் சுவையான மற்றும் சத்தான பழம் ஆகும். கோடை சீசனில் சப்போட்டா (Sapodilla) பழம் உடல் எடையை குறைக்க உதவும். இது எடை இழப்புக்கு வரும்போது பெரிதாக கவனிக்கப்படாது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்து உள்ளது. இது நம் உடல் எடை இழப்பிற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும்.
சப்போட்டாவில் (Sapota) நார்ச்சத்து அதிகம் உள்ளது. சப்போட்டா சாப்பிடுவதான் மூலம் பசியைக் கட்டுப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கலாம். இதனால், கலோரி உட்கொள்ளலை குறைத்து எடை இழப்புக்கு உதவுகின்றது. Father Killed His Son: 10 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து கொடூர கொலை; போக்குவரத்து காவலர் தலைமறைவு..!
இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளதால், செரிமானத்தை எளிதாக்குகின்றது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
சப்போட்டாவில் இயற்கையான சர்க்கரைகள் அடங்கியுள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல், விரைவான ஆற்றலை வழங்குகின்றது. இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன. மேலும், நம் உடல் கலோரிகளை மிகவும் வேகமாக எரித்து, உடல் எடையை (Weight Loss) குறைக்கின்றது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை இழப்பை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
சப்போட்டா, மற்ற பழங்களை ஒப்பிடுகையில், இதில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. இதனால் கலோரி நுகர்வு பற்றி அதிகம் கவலைப்படாமல், அதன் சுவையை முழுமையாக ருசித்து சாப்பிடலாம். இது உடல் எடை இழக்க விரும்புவோருக்கு மிகச் சிறப்பான சிற்றுண்டி உணவாக அமைகின்றது.