மே 06, சென்னை (Health Tips): நாம் உட்கொள்ளும் உணவை பொருத்துதான் நமது உடல் ஆரோக்கியம் உள்ளது. நமக்கு காலை நேரத்தை விட மதிய நேரத்தில்தான் அனைவருக்கும் அதிகளவில் பசி எடுக்கும். இதனால் கிடைக்கக்கூடிய அனைத்து உணவுகளையும் சாப்பிடுவதால் நமக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதன்காரணமாக, மதிய வேளையில் எவ்வகை உணவுகளை தவிர்க்க (Avoid Foods) வேண்டும் என்பது பற்றி இதில் பார்ப்போம்.
பர்கர் (Burger): பர்கர் போன்ற ஸ்நாக்ஸ் வகை உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் இது மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பர்கர், பீட்சா போன்ற உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிட்டால், கொழுப்புச் சத்துகள் அதிகளவில் உடலில் தங்கி இறுதியில் அது உடல் பருமன் அடைய செய்யும். Agni Nakshatram 2024: கிருத்திகை நட்சத்திரத்தின் வழியாக சூரியன் செல்லும் காலம்; அக்னி நட்சத்திரத்தின் பின்னணி.!
நூடுல்ஸ் (Noodles): இது நமது உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கக்கூடிய உணவாகும். இவற்றை மதிய வேளையில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள அதிக அளவிலான கார்ப்ஸ் நமது உடல் ஆரோக்கியத்தை பாதித்து உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
சூப் வகைகள் (Types of Soup): மதிய நேரத்தில் சூப் வகைகளை தவிர்ப்பது நல்லது. பொதுவாக சூப் வகைகள் சாப்பிட்ட உடனே பசியை தூண்டும். இதன்காரணமாக, அதிகமான அளவில் சாப்பாட்டை உட்கொண்டு பிறகு, உடல் பருமன் கூடும்.
சாலட் (Salad): இதில் மிக குறைந்த அளவில்தான் கலோரிகள் உள்ளன. எனவே, காலை நேர உணவாக இருக்குமே தவிர, மதிய நேரத்திற்கு உகந்தது அல்ல.
சான்விட்ச் (Sandwich): இதில் அதிகளவில் கார்ப்ஸ் இருப்பதால், பிரெட் வகை உணவுகள் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும்.