AGNI NAKSHATRAM (PHOTO CREDIT: PIXABAY)

மே 06, சென்னை (CHENNAI ): பொதுவாக கோடைகாலம் என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான நாட்களாக இருக்கிறது. மழைக்காலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி அத்தியாவசிய பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதனை பெரிதும் கண்டுகொள்ளாமல் வாழும் மக்கள் கோடையை (SUMMER SEASON 2024 INDIA) பார்த்து அஞ்சுவது உண்டு. ஏனெனில் இம்மாதம் கடும் வெப்ப அலை இந்தியாவின் பல மாநிலங்களை நேரடியாக தாக்கும் என்பதால், மக்கள் கடும் அவதியடைவதும், வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளை சந்தித்து துயருறுவதும் தொடரும். அக்னி நட்சத்திரத்தின் தொடக்கம் என்பது ஒவ்வொரு ஆண்டின் மே மாதம் இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னே கடும் வெயில் வாட்டி வதைத்தது. Pakistan Shocker: ஆற்றங்கரைக்கு சென்ற இளைஞர்; ஆடையை அவிழ்க்க வைத்து நிர்வாணப்படுத்தி அதிர்ச்சி சம்பவம் செய்த 3 பேர் கும்பல்.! 

2024 அக்னி நட்சத்திரம் (AGNI NAKSHATRAM 2024): வரலாறு மற்றும் புராணங்களின்படி, அக்னி நட்சத்திரம் என்பது பரணி நட்சத்திரத்தின் 3 வது - 4 வது காலாண்டில், ரோகினி நட்சத்திரத்தின் 1 வது காலாண்டு வழியே காலாண்டில் சூரியன் கடந்து செல்லும். இக்கலாமே அக்னி நட்சத்திரமாக கருதப்படுகிறது. அக்னி நட்சத்திரத்தின் சித்திரை கிருத்திகை நட்சத்திரம் முருகன் கோவில்களில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாத நாட்கள் ஆகும். 2024ம் ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தை கடந்து செல்லும் காலமான 25 நாட்கள் இருக்கிறது. மே 04ம் தேதி முதல் மே 28ம் தேதி வரையில் நடப்பு ஆண்டில் அக்னி நட்சத்திரத்தின் சவாலை மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். CISCE ISC Exam Results 2024: சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் படித்த 10, 12 ம் வகுப்பு மாணவர்களான தேர்வு முடிவுகள் அறிவிப்பு.. விபரம் உள்ளே.! 

வழிபாடும், உடல்நல பராமரிப்பும் முக்கியம்: இம்மாதம் வெப்பம் அதிக அளவு வந்தாலும், சமய வழிபாட்டில் ஈடுபாடு கொண்டோர் முருகனை வேண்டுவது உண்டு. இந்தியாவில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் திருவிழாவும் நடைபெரும். பழனி முருகன் கோவிலில் பழநியாண்டவருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திரத்துடன் நாம் அனுதினம் இந்த 25 நாட்களை கடத்த வேண்டும் என்பதால், அதற்கேற்ப உடல்நலனையும் பராமரிக்க வேண்டும். நீர், இளநீர், பழைய கஞ்சி, நுங்கு, வெள்ளரி, தர்பூசணி உட்பட உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அக்னி நட்சத்திரத்தை எதிர்கொண்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் இனிய அக்னி நட்சத்திர நல்வாழ்த்துக்களையும் உங்களுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.