ஆகஸ்ட் 05, சென்னை (Festival News): ஆடி மாதத்தில் அம்மனுக்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆடிப்பூரம் (Aadi Pooram)ஆகும். அன்னை உமாதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அம்மனை (Amman) விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரனும், நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பூரம் (Aadi Pooram Festival) அம்பிகைக்கு மிகவும் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
ஆடிப்பூரம் என்பது 27 நட்சத்திரங்களில் 11-வது நட்சத்திரம் தான் பூரம். எல்லா மாதங்களிலும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், அந்நாளில் தான் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும் விழாவும் கொண்டாடப்படுகின்றது. ஆடி மாத பூர நட்சத்திரத்தில் தான் அம்பாள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதாரமான ஆண்டாளின் அவதார தினத்தையே ஆடிப்பூரம் என்ற பெயரில் கொண்டாடி வருகின்றோம். Andal Jayanthi: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்; கேட்ட வரம் தரும் ஆண்டாள் அருள் பெறுக, வாழ்வில் மகிழ்ச்சி பெறுக.!
அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா:
ஆடி மாதம் (Aadi Month 2024) அம்மனுக்குரிய மாதமாகும். அன்னை பார்வதி தேவியும் மண்ணில் அவதாரம் எடுத்ததும், இந்த ஆடிப்பூரம் நட்சத்திரம் அன்றுதான் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆடிப்பூரம் அன்று தான் அன்னை பராசக்திற்கு வளைகாப்பு திருவிழா நடத்தப்படும். எனவே, இந்நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூரம் 2024 வழிபாட்டு நேரம்:
இந்த 2024-ஆம் ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 07-ஆம் (புதன்கிழமை) தேதியும், தமிழ் மாதத்தில் ஆடி 22-ஆம் தேதியும் வருகின்றது. பூரண நட்சத்திரமானது ஆகஸ்ட் 06-ஆம் தேதி மாலை 6.42 மணி முதல் ஆகஸ்ட் 07-ஆம் தேதி இரவு 9.03 வரை உள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் 07-ஆம் தேதி முழுவதும் ஆடிப்பூரண வழிபாட்டில் ஈடுபடலாம். எனவே, திருமண வரன் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல், குங்குமம் வாங்கி கொடுத்து, அம்மனிடம் வேண்டிக் கொண்டி வேண்டும் வரங்களை பெற்றுக் கொள்ளலாம்.