
மே 24, சென்னை (Health Tips Tamil): நல்ல மணம் கொண்ட பொருள் என்பதை உவமைப்படுத்த நல் + நாரி என்பது நன்னாரி என்றாகிப்போயுள்ளது. ஆனந்த மூலிகை, பாதாள மூலிகை என்ற புனைபெயர்களை கொண்ட நன்னாரியை ஆங்கிலத்தில் ஹெமிதேசம்ஸ் இண்டிகஸ், இந்தியன் சர்ப்பரிலா (Hemidesmus Indicus, Indian Sarsaparilla) என்றும் அழைப்பார்கள். நன்னாரி வேரில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டில் செழிப்பாக காணப்படும் நன்னாரியை அவ்வப்போது நாம் பயன்படுத்தி வருவது உடலுக்கு நன்மையை வழங்கும். Natural Weight Gain Tips: இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
நன்னாரி வேரில் கிடைக்கும் நேரடி நன்மைகள்:
ஓமியோபதி, சித்தாவில் கொடிவகை நன்னாரி வேர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நன்னாரி வேறை நீரில் சேர்த்து குடிக்க உடல் வெப்பம் தணிக்கப்படும். தண்ணீர் குடிக்கவும் இதமாக இருக்கும். உடலில் உள்ள சிறுநீரை சுத்தப்படுத்தி அதிகம் வெளியேற்றும். ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களும் அகற்றப்பட்டு, ரத்தம் தூய்மைப்படும். கோடையின் நாவறட்சியை போக்க நன்னாரி நல்லது. உடலின் வெப்பத்தை தணிக்க மண்பானையில் நீர் வைக்கும்போது நன்னாரி வேரையும் சேர்க்கலாம். இது உடனடி ஆற்றலை வழங்கும் தன்மை கொண்டது ஆகும்.