Healthy Foods (Photo Credit: Pixabay)

மே 22, சென்னை (Health Tips): இன்றைய காலக்கட்டத்தில் பலர் உடல் எடையை அதிகரிக்க ஜிம்மிற்கு செல்கின்றனர். அதில், ஒரு சிலர் வேகமாக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று, தேவையற்ற மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருட்களைத் தேர்வு செய்கின்றனர். இது உடலுக்குப் பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. உடல் எடை அதிகரிக்கும் முயற்சி ஆரோக்கியமானதாகவும், இயற்கையான முறையில் இருக்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில், தினமும் காலையில் குடிக்க ஏற்ற சில எளிய, சத்தான பானங்கள் உடல் எடையை (Natural Weight Gain) இயற்கையாக அதிகரிக்க உதவுகின்றன. இவை, உடலுக்குத் தேவையான சத்துகளையும் சக்தியையும் வழங்குவதுடன், உடல் கட்டமைப்பையும் மேம்படுத்த உதவுகிறது. இதன் முழு தொகுப்பை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Health Tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?.. எளிமையான டிப்ஸ்.!

இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க சிறந்த பானங்கள்:

  • பால் மற்றும் தேங்காய்த் துருவலில் நன்மை தரும் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இதில், புரோட்டீன் மற்றும் தாதுக்கள் உள்ளதால், உடல் வலிமை பெறும்.
  • முந்திரி, பாதாம், பட்டாம் பருப்பு சேர்த்த பால் குடித்து வந்தால், புரதச்சத்து அதிகரித்து, தசைகளை வலுப்படுத்துகிறது.
  • எலுமிச்சை தேன் கலந்த சூடான தண்ணீர் குடித்து வர, பசியை தூண்டி, செரிமானத்தை மேம்படுத்தும். மேலும், உடல் எடையைச் சீராக்கும்.
  • நாட்டு சர்க்கரை கலந்த பாலில் ஓமம் பொடி கலந்து குடிப்பது ஜீரண சக்தியை ஊக்குவித்து, உடல் எடையை அதிகரிக்க உதவுவதோடு, உடலை வலிமை பெறச் செய்கிறது.
  • கம்பு அல்லது சாமை கஞ்சி குடித்து வந்தால், உடலுக்கு சக்தியைத் தரும். மலச்சிக்கல் நீக்கும்.

குறிப்பு: மேல் குறிப்பிட்ட தகவல்களை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.