ஜனவரி 26, சென்னை (Chennai): பலருக்கும் பிடித்த உணவுப்பொருட்களில் ஒன்றாக இருக்கும் முட்டை, உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிடுவது, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, உடல் வலிமையை மேம்படுத்துகிறது. ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குவதில் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ள முட்டையை, வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. இந்த தகவல் அனைவருக்கும் நன்கு அறிந்த ஒன்றே. ஆனால், முட்டையை கொதிக்க வைக்கும் நீரில் உள்ள சத்துக்கள் குறித்து நீங்கள் யோசித்து உண்டா? Cauliflower Fry Recipe: சாதத்துக்கு ஏற்ற காலிபிளவர் வறுவல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
முட்டை வேக வைத்த நீர் செய்யும் பயன்கள்:
இயல்பாகவே நாம் முட்டை வேகவைத்த நீரை கீழே ஊற்றுவோம். ஆனால், அதன் நீரில் இருக்கும் நன்மை வியக்கவைக்கும். அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இன்று காணலாம். முட்டை வேகவைத்து எஞ்சியுள்ள நீரின் சூடு ஆறியதும், அதனை தாவரங்களுக்கு கனிம வளமாக பயன்படுத்தலாம். முட்டை நீரில் கொதிக்கும்போது, அதில் இருக்கும் நீரில் கால்சியம் வெளியாகும். இது தாவரங்களுக்கு ஊக்கமளிக்கும். முட்டை ஓட்டின் கால்சியம் மண்ணின் பிஎச் அளவை சமநிலைப்படுத்தப்படும். தக்காளி, மிளகு போன்ற செடி-கொடிகளை வளர்ப்போர், இதனை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.