ஆகஸ்ட் 12, சென்னை (Kitchen Tips): புதிதாக வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலாப் பொடியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு கிளறி வறுவல் தான் கத்திரிக்காய் பொடி கறி (Kathirikai Podi Curry) ஆகும். இந்த முறையில் கத்திரிக்காயை (Brinjal) மிகவும் சுவையாக செய்து சாப்பிடலாம். இதனை எப்படி சுவையாக செய்து சாப்பிடுவது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 7 (நறுக்கியது)
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4
கொத்தமல்லி விதைகள் - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
புளி விழுது - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. Cheesy Egg Toast Recipe: குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஸ்நாக்ஸ்.. சீஸி முட்டை டோஸ்ட் செய்வது எப்படி? விபரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் கடலை பருப்பு, கொத்தமல்லி விதைகள், சிவப்பு மிளகாய் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து, அவற்றை ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும். ஆறிய பிறகு, மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் 1 மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த கத்தரிக்காயை மஞ்சள் தூள், உப்பு, புளி விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
சுமார் ஐந்து நிமிடங்கள் கத்தரிக்காயை சமைக்கவும். சமைத்த கத்திரிக்காய் ஆறிய பிறகு, அதில் 2 மேசைக்கரண்டி மசாலா தூள், கறிவேப்பிலை மற்றும் மீதமுள்ள எண்ணெய் சேர்க்கவும்.
மேலும், 4 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் சமைக்கவும். பின்னர் அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் பொடி கறி தயார்.