ஏப்ரல் 22, சென்னை (Kitchen Tips): குழந்தைகளுக்கு சத்தான மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைக் கீரை (Centella Asiatica) கொண்டு எப்படி சட்னி செய்யலாம் என்பதை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வல்லாரைக் கீரை - 1 கட்டு

துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 தேக்கரண்டி

பூண்டு- 5 பல்

வரமிளகாய் - 3

புளி - சிறிதளவு

பெருங்காயத்தூள் - 1 பின்ச்

உப்பு - தேவையான அளவு. Mysterious Fever: மர்ம காய்ச்சல்; 7 வயது சிறுவன் பலி..!

தாளிக்க வேண்டியவை:

எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

செய்முறை:

முதலில் வல்லாரைக் கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து, நன்கு ஆய்ந்து வைத்துக்கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வல்லாரைக் கீரையை போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். அதில், துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வதக்கி அதனை ஆற வைத்து மிக்ஸில் போட்டு, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவைகளை தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் கலந்து விட்டால் சத்தான வல்லாரைக் கீரை சட்னி தயார்.