ஏப்ரல் 22, மாதவரம் (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்து உள்ள பாடியநல்லூர் ஊராட்சி, ஏழுமலை நகரில் உள்ள தனியார் களத்தில் தங்கி வேலை செய்து வரும் தம்பதி சங்கர்-கோவிந்தம்மாள். இத்தம்பதிக்கு சிவா (வயது 7) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். Car Accident: தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து; திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்..! 5 பேர் பலி..!

இந்நிலையில், சிறுவனுக்கு கடந்த சில நாட்களாகவே மர்ம காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தான். இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருந்து கடையில் (Medical Shop) மாத்திரை, மருந்துகளை வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் மேற்கொண்டு உடல்நலம் பாதிப்படைந்து இருமல், சளி தொடர்ந்து நீடித்துள்ளது. உடல்நலம் மோசமான நிலைக்கு சென்றது. அப்போது சிறுவன் சிவாவை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த செங்குன்றம் காவல்துறையினர், சிறுவன் உடலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.