மே 23, சென்னை (Kitchen Tips): ரவா லட்டு கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு வகை ஆகும். இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டிலும் ஏறத்தாழ ரவா லட்டு தமிழர்களின் பாரம்பரிய உணவாகவே உள்ளது. அனைத்து பண்டிகை தினங்களிலும், இதனை வீடுகளில் செய்து சாப்பிட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ரவா லட்டுவை (Rava Laddu) எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம். Boat Capsize Accident: படகு கவிழ்ந்து விபத்து; 5 பேர் சடலமாக மீட்பு..!
தேவையான பொருட்கள்:
ரவை - 400 கிராம்
சர்க்கரை - ஒன்றரை கப்
நெய் - 100 மில்லி
முந்திரி - 10
ஏலக்காய் - 5
செய்முறை:
முதலில் ரவையை கருகாமல் வருத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ரவை மற்றும் சர்க்கரை, ஏலக்காய் அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு, அதில் நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
மேலும், அதில் முந்திரிப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, அதனை கலவையில் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
முந்திரி பொறித்த நெய்யை எடுத்து, சிறிது சிறிதாக ஊற்றி லட்டு பிடிக்கும் பதத்திற்கு வந்த பிறகு லட்டு பிடிக்கலாம். அவ்வளவுதான், சுவையான குழந்தைகளுக்கு பிடித்தமான லட்டு ரெடி.