Egg Candy (Photo Credit: Facebook)

மே 16, சென்னை (Kitchen Tips): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் முட்டை மிட்டாய் (Muttai Mittai) மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் சுவை தனித்துவமாக இருந்து வருகின்றது. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த முட்டை மிட்டாய் (Egg Candy) எப்படி செய்வது என்பது பற்றி இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

சர்க்கரை - அரை கப்

பொடித்த பாதாம் - கால் கப்

பால் பவுடர் - அரை கப்

நெய் - கால் கப்

குங்குமப்பூ - சிறிதளவு. Oppo Reno 12 Series: ஓப்போ ரேனோ 12 சீரிஸ் இந்தியாவில் மே 23-ஆம் தேதி அறிமுகம்..! விவரம் உள்ளே..!

செய்முறை:

முதலில், ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் முட்டை, சர்க்கரையை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்க வேண்டும்.

பின்னர், இதனுடன் பொடித்த பாதாம், பால் பவுடர், நெய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துகொள்ளவும்.

அடுத்து, ஒரு பாத்திரத்தில் உள்ளே நன்றாக நெய் தடவி, கலந்து வைத்திருக்கும் கலவையை அதனுள் ஊற்றி நெய் மற்றும் நறுக்கிய வைத்த பாதாம், முந்திரியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அகலமான பாத்திரத்தில் இந்த பாத்திரத்தை வைத்து, இதனை மூடி மிதமான சூட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

இதனையடுத்து, நன்றாக வெந்த பிறகு இதனை ஆற வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான முட்டை மிட்டாய் ரெடி. இதன்பிறகு, இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி அனைவரும் சாப்பிடலாம்.