மே 16, சென்னை (Technology News): ஓப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வரிசையில் Reno 12 சீரிஸை மே 23-ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில் இதன் வெளியீட்டு தேதி மற்றும் போன்களின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட் போனில் உள்ள சில அம்சங்களை பற்றி இதில் பார்ப்போம்.

இதன் முன்னோட்ட காட்சிகளில் இரண்டு ஸ்மார்ட்போன் வடிவமைப்புகளை காட்சிப்படுத்துகிறது. இது ஓப்போ ரேனோ 12 (Oppo Reno 12) மற்றும் ஓப்போ ரேனோ 12 ப்ரோ (Oppo Reno 12 Pro) ஆகியவையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் LED ஃபிளாஷ் லைட் கொண்ட செவ்வக வடிவில் உள்ளது. Mini Bus Accident: மினி பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்..!

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

ஓப்போ நிறுவனம் அதன் முழுமையான விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ரேனோ 12 சீரிஸ் முந்தைய மாடல்களை விட மேம்படுத்தப்பட்ட 6.7-அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். 50MP செல்பி கேமரா மற்றும் 50MP பிரதான சென்சார், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ கொண்ட மூன்று ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. ரேனோ 12 ப்ரோவில் சமீபத்திய MediaTek Dimensity 9200 Star Speed Edition செயலி மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் 5,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை விவரங்கள் பற்றி எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.