ஜனவரி 07, சென்னை (Kitchen Tips): ஆந்திரா எப்போதுமே காரமான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் என்ன ரெசிபிகள் செய்தாலும் காரம் தூக்கலாக இருக்கும். குறிப்பாக, சப்பாத்திக்குக் கூட 2 பச்சை மிளகாயை வைத்து சாப்பிட்டு விடுவார்கள். அந்தளவிற்கு பச்சை மிளகாய் இல்லாமல் எந்த ரெசிபியும் இருக்காது. அந்தவகையில், இன்றைக்கு இட்லி, தோசைக்கு வழக்கமான சட்னிக்கு மாற்றாக ஆந்திர ஸ்டைலில் பச்சை மிளகாய் சட்னி (Green Chili Chutney) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம். Thatta Payaru Kuzhambu Recipe: மணக்க மணக்க.. சுவையான தட்டைப்பயறு குழம்பு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 150 கிராம்
பூண்டு - 10 பல்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் - சிறிதளவு
ஆப்பிள் சைடர் வினிகர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பச்சை மிளகாயை லேசாக கீறி வைத்துக் கொள்ளவும். பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
- மிளகாயின் நிறம் மாறத் தொடங்கியதும் பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேங்காய் மற்றும் வேர்க்கடலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- வறுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும், மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், இதனுடன் சிறிதளவு உப்பு, வினிகர் சேர்த்து லேசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் போதும், காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி ரெடி.