நவம்பர் 11, சென்னை (Kitchen Tips): பொதுவாகவே அப்பளத்தை உணவுகளில் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால், அந்தப் அப்பளத்தை வைத்தே குழம்பு செய்யலாம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் அப்பளத்தை வைத்து அசத்தல் சுவையில் எளிமையான முறையில் அப்பளக்குழம்பு (Appala Kuzhambu) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Spanish Omelette Recipe: பாரம்பரியமான ஸ்பானிஷ் ஆம்லெட் ருசியாக எப்படி செய்வது..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பொரித்த அப்பளம் - 5
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
புளி - சிறிதளவு
சாம்பார் தூள் - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
- பின் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு பல் சேர்த்து வதக்கி பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ளவும். பின்னர், அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
- இவையனைத்தும் நன்றாக வதங்கியதும் சாம்பார்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வதக்கிக்கொள்ள வேண்டும்.
- பின்னர் புளி கரைசலை சேர்த்து, குழம்பு கெட்டியாகும் வரையில் கொதிக்கவிட்டு, பொரித்து வைத்துள்ள அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து, அந்த குழம்பில் போட்டு ஒரு நிமிடம் வரையில் வேகவிட்டு இறக்கினால் அருமையான சுவையில் அப்பளக்குழம்பு ரெடி.