செப்டம்பர் 13, சென்னை (Kitchen Tips): நம்முடைய உணவு முறையில் பல்வேறு விதமான உணவுகள் இருந்தாலும், நம் பராம்பரிய உணவுகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. குறிப்பாக இன்றைக்கு குழந்தைகள் மிட்டாய், சாக்லேட்டுகள், பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதற்கு அதிகம் விரும்புகின்றனர். இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான முறையில் உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். அந்தவகையில் எள்ளு லட்டு (Ellu Laddu) ரெசிபி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இதில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், புரதச்சத்து , மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இது நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. மேலும், கால்சியம் சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் எலும்புகள் வலுப்பெற உதவும். Kavuni Arisi Payasam Recipe: உடலுக்கு வலுசேர்க்கும் கவுனி அரிசி பாயசம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
தேவையான பொருட்கள்:
எள்ளு - 300 கிராம்
வேர்க்கடலை - 300 கிராம்
தேங்காய் துருவல் - 300 கிராம்
வெல்லம் - 500 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் எள்ளைப் (Sesame) போட்டு, மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பொன்னிறமாக வந்தவுடன் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
- அதே கடாயில் வேர்க்கடலையை தோல் நீக்கி ஒரு 3 நிமிடங்களுக்கு வறுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பின்னர், துருவிய தேங்காயையும் பொன்னிறத்திற்கு வறுத்துக் கொள்ளவும். இவற்றை நன்கு ஆற வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் முதலில் வறுத்த எள், வறுத்த வேர்க்கடலையை மட்டும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து, வறுத்த தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் போன்றவற்றை லேசாக அரைத்துக் கொள்ளவும்.
- இதனுடன், சிறிதளவு துருவிய வெல்லம் சேர்த்து அரைத்து, இவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிதளவு நெய் ஊற்றி அனைத்தையும் பிசைந்துக் கொள்ள வேண்டும்.
- லட்டு பிடிக்கும் பதத்திற்கு வரும் வரை பிசைந்து விட்டு, சிறிய சிறிய லட்டுகளாக பிடித்து எடுத்தால், அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான எள்ளு லட்டு ரெடி.