மே 10, சென்னை (Kitchen Tips): கோடை வெயில் காலத்தில் நம் உணவில் நாம் அதிகமாக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நல்லது. அதில், சுரைக்காய் (Bottlegourd)அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ள காய்கறி ஆகும். இதில் வைட்டமின் பி, சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இரும்பு சத்து, தாது உப்பு, பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். உடல் சூட்டை குறைத்து, கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். அந்தவகையில், இதனை வைத்து சுவையான சுரைக்காய் அல்வா (Suraikkai Halwa) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம். Tecno Camon 30 Series: சோனி கேமரா வசதியுடன் டெக்னோ கேமான் 30 சீரிஸ் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு..!
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 300 கிராம்
பால் – 200 மில்லி லிட்டர்
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முந்திரி, பாதாம் பிஸ்தா
செய்முறை:
முதலில் சுரைக்காய் தோல் மற்றும் விதைகளை நீக்கி துருவிக் கொள்ள வேண்டும். பின்னர், சாறு பிழிந்து சுரைக்காயில் இருக்கும் தண்ணீரை முழுவதுமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் துருவிய சுரைக்காயை சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வதக்கி, அடுத்து 3 நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
பின் அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து, மீண்டும் 5 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். பால் முழுவதும் வற்றிய பின்பு, சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கலக்கவும்.
பின்னர், அதில் நறுக்கி வைத்த முந்திரி, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறிவிட்டு, மீண்டும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.