Carrot Chips Recipe (Photo Credit: YouTube)

ஜனவரி 20, சென்னை (Kitchen Tips): மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்நாக்ஸ்கள் சாப்பிட நினைத்தால், அதிலும் டீ குடிக்கும் போது மொறு மொறுவென்று ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தால் சூப்பராக இருக்கும். முறுக்கு, மிக்சர், உருளைக்கிழங்கு சிப்ஸ் என வழக்கமான ஸ்நாக்ஸ்கள் இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிடலாம். அந்தவகையில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கேரட்டைக் கொண்டு சிப்ஸ் செய்யலாம். கேரட் சிப்ஸ் (Carrot Chips) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Tomato Pachadi Recipe: சுவையான தக்காளி பச்சடி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

கேரட் - 4

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

அரிசி மாவு - அரை தேக்கரண்டி

சோள மாவு - அரை தேக்கரண்டி

கடலை மாவு - அரை தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் கேரட்டை நீள வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள கேரட்டுடன் மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்து ஒரு 10 நிமிடங்களுக்கு ஊற வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிப்ஸ்க்காக பிசைந்து வைத்துள்ள கேரட் கலவையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்தால், சுவையான மொறுமொறுப்பான கேரட் சிப்ஸ் தயார்.