Green Chilly Curry (Photo Credit: Pixabay / Facebook)

அக்டோபர் 22, சென்னை (Health Tips): இந்திய உணவுகளில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ள பச்சை மிளகாய், காரத்திற்கு பெயர்போனது. பச்சையாக இருக்கும் மிளகாய், காய வைக்கப்பட்டு வரமிளகாயாக எடுக்கப்படும்போது அதன் காரமும், உணவில் சேர்க்கப்படும்போது அதன் சுவையும் தனித்துவமாக இருக்கும். காரத்தன்மை கொண்ட பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பி கிடக்கின்றன. மிகக்குறைந்த கலோரிகள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும். பீட்டா கரோட்டின் இதயத்தின் செயல்பாடுகளை முறையாக பராமரிக்கும், இரத்த கொழுப்பு லவ்வு கூறும், இதயநோய் தாக்கம் என்பது வெகுவாக குறைக்கப்படும். இதில் இருக்கும் சிலிகான் சத்து இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படுத்தப்படும்.

இன்று பச்சை மிளகாயில் சுவையான மிளகாய் கறி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். வீட்டில் பச்சை மிளகாய் தவிர்த்து ஒன்றும் இல்லை, பச்சை மிளகாய் விலை மலிவான சமயத்தில், மிளகாய் கறி சமைத்து அசத்தலாம்.

பச்சை மிளகாய் கறி செய்யத் தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் - 20,

தேங்காய் பால் (கெட்டியாக) - 1/2 கப்,

நாட்டு வெங்காயம் - 100,

வெல்லம் - சிறிதளவு,

கடுகு - 1/2 கரண்டி,

சீரகம் - 1/2 கரண்டி,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

கறிவேப்பில்லை - சிறிதளவு,

புளி - சிறிதளவு,

நல்லெண்ணெய் - 2 கரண்டி,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  1. முதலில் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக்கொள்ளவும். நாட்டு வெங்காயத்தை பொடிபொடியே அரிந்துகொள்ளவும்.
  2. வானெலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் மிதமான தீயில் பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.
  3. வெங்காயம் பகுதியளவு வெந்ததும் புளிக்கரைசலை சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள், சிறிதளவு சுவைக்காக விருப்பம் இருப்பின் மசாலா, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்.
  4. இவை நன்கு கலந்து எண்ணெய் பிரியும் தருவாயில் அடுப்பை அனைத்துவிடலாம். சூடு பகுதியளவு இருக்கும்போது தேங்காய் பால் சேர்த்து கிளறி பின் பரிமாறலாம். சுவையான மிளகாய் கறி தயார்.

குறிப்பு: வயிற்றுப்புண், தொண்டைப்புண், அல்சர், காரம் விரும்பாதோர் மிளகாய் தொடுக்கறியை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இதனால் அடி வயிறு வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என்பதால், மிளகாய் சாப்பிட விருப்பம் உடையோர் மிளகாய் கறியை சாப்பிடலாம்.