Chocolate Coffee Chia Pudding (Photo Credit: Pixabay)

மே 07, சென்னை (Kitchen Tips): நம் அனைவருக்கும் பெரும்பாலும் காபி பிடிக்கும். அதிலும், பில்டர் காபி என்பது தென் இந்தியாவின் ஒரு சிறந்த பானமாகும். உடல் எடை குறைக்க காபி சியா புட்டிங் ஒரு சிறந்த உணவாகும். அந்த வகையில், சாக்லேட் காபி சியா புட்டிங் (Chocolate Coffee Chia Pudding) எப்படி செய்வது என்பது பற்றி இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தேன், சாக்லேட் பவுடர், காபி பவுடர் - தலா 3 கரண்டி

வாழைப்பழம் - 1

பால் - 200 மில்லி லிட்டர்

சியா விதை - 2 கரண்டி. Panama election: பனாமா அதிபர் தேர்தல்.. ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி..!

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பின்னர், சாக்லேட் பவுடர், காபி பவுடர் (Coffee Powder) மற்றும் சியா விதைகளை ஒன்றாக சேர்த்து கிளறிவிட வேண்டும். இதனை நன்கு கலந்த பிறகு இதில் தேவையான அளவு பால் சேர்த்து கிளறவும். பிறகு சிறிதளவு தேன் கலந்து கிளற வேண்டும். இதை ஒரு கப்பில் ஊற்றி சுமார் 8 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவ்வளவுதான் சுவையான சாக்லேட் காபி சியா புட்டிங் ரெடி. இது நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும், தினசரி இதனை காலையில் உணவாக சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.