மே 28, சென்னை (Kitchen Tips): நாம் எப்பொழுதும் மதிய வேளையில் சாம்பார், குழம்பு செய்து சாப்பிட்டு வருகிறோம். இதனை, எளிமையாக ஏதாவது செய்து சாப்பிட நினைத்தால், வீட்டில் உள்ள கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைக் கொண்டு அருமையான சுவையில் தொக்கு செய்து சாப்பிடலாம். இந்த கொத்தமல்லி தொக்கு (Kothamalli Thokku) சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் மற்றும் இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும், மிக முக்கிமாக ஒருமுறை இந்த தொக்கு செய்தால், ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அவற்றை எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லித் தழை – 2 கட்டு
வெந்தயம் – அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
இஞ்சி – 2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு. Young Man Disguised Himself Woman And Married: பெண் வேடமிட்டு திருமணம் செய்துகொண்ட வாலிபர்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!
செய்முறை:
முதலில், கொத்தமல்லித்தழையில் (Coriander) உள்ள தடினமான தண்டுபகுதியை நீக்க வேண்டும். கொத்தமல்லித்தழையை மண்ணில்லாமல் நன்றாக அலசி, துணியில் ஈரம் போக உலர்த்தவும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு வறுக்க வேண்டும். மீதமுள்ள எண்ணெயில் இஞ்சியை வறுத்தபின், கொத்தமல்லித் தழையை சேர்த்து வதக்கி கொள்ளவும். மேலும், புளியையும் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு, அடுப்பை அணைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து மிக்ஸியில் மிளகாய், வெந்தயம், உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து முதலில் பொடிக்கவும். அதன்பின் கொத்தமல்லித்தழை, இஞ்சி, புளி சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின் மீதமுள்ள எண்ணெயில் கடுகு சேர்த்து தாளித்து, அரைத்த விழுதினை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இறுதியில், இவை நன்கு ஆறியதும் காற்றுபுகாத பாட்டிலில் வைத்து பயன்படுத்தி வரவும். சுவையான கொத்தமல்லி தொக்கு ரெடி.