மே 28, இந்தோனேசியா (World News): இந்தோனேசியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு, இளைஞர் ஒருவருக்கு சமூக வலைதளம் மூலம் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், நாளடைவில் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், சில நாட்களுக்கு பிறகு இவர்களுக்குள் நேரடி அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு மணமகனின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மேலும், அந்த இளம்பெண் தனக்கு பெற்றோர் உறவினர் யாரும் இல்லை என மணமகனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். பின், இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 12-ஆம் தேதி அன்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். Realme Narzo N65 5G: ரியல்மி நார்சோ N65 5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்..! அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் உள்ளே..!
இந்நிலையில், திருமணம் முடிந்த முதல் 13 நாட்கள் வரை அந்த இளம்பெண் தான் அணிந்திருந்த ஹிஜாப் (Hijab) உடையை கழற்றவில்லை. புதுமணப்பெண், வீட்டில் இருக்கும்போது, அதே உடையில் இருந்துள்ளார். வீட்டில் உள்ள யாரிடமும் நெருங்கி பழக மறுத்து வந்துள்ளார். மேலும், அவருடைய கணவரிடம் தனக்கு மாதவிடாய் உள்ளதாக கூறி அவரிடம் இருந்து விலகி இருந்துள்ளார். தொடர்ந்து இவ்வாறு நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை கண்டு சந்தேகம் அடைந்த அவரது கணவர், ஒருநாள் அவரது மனைவி இரவில் வெளியே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, இவரது மனைவியாக இருந்து வந்தது ஒரு ஆண் என்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.
அங்கு, அவர் ஒரு பெண்ணைப் போல உடை அணிந்து கொண்டிருப்பதை பார்த்த அவர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஒரு பெண்ணைப் போல இருப்பதாக யாரும் சந்தேகிக்க முடியாது என்றும், அவரது குரல் ஒரு பெண்ணின் குரலைப் போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வாலிபரிடம் நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு, அவர் சொத்தை அபகரிக்கும் நோக்கில் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.