ஜூன் 05, சென்னை (Kitchen Tips): வெண்டைக்காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் வேண்டாம் என்று கூறுவர். இதன் வழவழப்பு தன்மை காரணமாக யாரும் இதனை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால், இந்த வெண்டைக்காயை (Ladies Finger) வடை செய்து கொடுத்தால், அனைவரும் சாப்பிடுவர். வடை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். வெண்டைக்காயை (Okra) வைத்து, மொறுமொறுவென்று வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்தவகையில், வெண்டைக்காய் வடை (Vendakkai Vada) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - அரை கப்
வெண்டைக்காய் - 10
சோம்பு - 1 கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 4 பல்
பட்டை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 2
கருவேப்பிலை - 3 கொத்து
உப்பு - அரை கரண்டி. Realme Narzo N63: ரியல்மி நார்சோ N63 ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து, கடலை பருப்பை ஒன்றிற்கு இரண்டு முறை கழுவி, 10 நிமிடம் வரை ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
பின், ஒரு மிக்ஸியில் சோம்பு, பட்டை, கிராம்பு, பட்டை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன், ஊறவைத்துள்ள கடலை பருப்பை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு, பருப்பு வடை பதத்தில் மாவை அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து, இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர், 3 நிமிடம் கழித்து வடையாக தட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, வடையை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு எடுத்தால் சூடான சுவையான வெண்டைக்காய் வடை ரெடி.