Realme Narzo N63 (Photo Credit: @FoneArena X)

ஜூன் 05, சென்னை (Technology News): ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி நார்சோ N65 5G ஸ்மார்ட் போனை (Realme Narzo N65 5G) இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிறகு, நிறுவனத்தின் புதிய 4G ஸ்மார்ட் போனாக ரியல்மி நார்சோ N63-யை (Realme Narzo N63)அறிமுகப்படுத்தியுள்ளது. இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரியல்மி C63 ஸ்மார்ட் போனின் விவரக்குறிப்புகளின் அடிப்படையில் உள்ளது.

இந்த ஸ்மார்ட் போனில், 50MP கேமரா அமைப்பு, 45W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரி திறன், வேகன் லெதர் பேக் பேனல் மற்றும் பல AI அம்சங்களுடன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்தியயாவில் பட்ஜெட் விலையில் ரூ.9,000-க்குள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்களை இதில் பார்ப்போம்.

விலை மற்றும் விற்பனை விவரம்:

இந்த ஸ்மார்ட் போன், 4GB+64GB மற்றும் 4GB+128GB என இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முறையே ரூ.8,499 மற்றும் ரூ.8,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கும். Private Plane Crash: பிரேசில் நாட்டில் தனியார் விமானம் விழுந்து விபத்து; 2 பேர் பலி..!

வருகின்ற ஜூன் 10-ஆம் தேதி முதல் விற்பனையின் ஒரு பகுதியாக, நிறுவனம் இரண்டு வகைகளிலும் 500 ரூபாய்க்கு வரையறுக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட நேர தள்ளுபடியை வழங்குகின்றது. ரியல்மி நிறுவனத்தின் ஆன்லைன் சேனல் மற்றும் அமேசான் (Amazon) மூலம் Twilight Purple மற்றும் Leather Blue வண்ணங்களில் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்:

இதில், 6.67-inch HD+ 120Hz டிஸ்ப்ளேவுடன், ​​90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 560 nits பீக் பிரைட்னஸுடன், 6.74-இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், UNISOC T612 octa-core செயலியைக் கொண்டுள்ளது. இது சராசரி சிப்செட் மற்றும் Realme C51 மற்றும் Realme C63 போன்ற பட்ஜெட் போன்களில் இதே தான் பயன்படுத்தியுள்ளனர். இது 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன், ரேமை விரிவுபடுத்தும் அம்சங்களுடன் வந்துள்ளது.

பின்புற கேமரா அமைப்பில் ஒற்றை 50MP AI சென்சார் மற்றும் 8MP செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் தெளிவான புகைப்பட விவரங்களுக்கு AI பூஸ்ட் போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன.

இதில், 5,000mAh பேட்டரி திறன் மற்றும் 45W SUPERVOOC சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களுடன் உள்ளது. மேலும், IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, இது தூசி மற்றும் நீர் தெறிப்பிலிருந்து பாதுகாக்கும்.