Vazhaipoo Vadai (Photo Credit: @iam_susi X)

ஏப்ரல் 25, சென்னை (Kitchen Tips): தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான, சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்பதை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 2 கப் (நறுக்கியது)

சனா பருப்பு - 1 கப்

பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு - தலா 3 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

சீரக விதைகள் - ஒன்றரை தேக்கரண்டி

வெங்காயம் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு (வறுப்பதற்கு ஏற்ற அளவு)

உப்பு - தேவையான அளவு. IT Employee Arrested In Case Of Cannabis: பெண்கள் விடுதி அறையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் ஐ.டி. ஊழியர் உட்பட இருவர் கைது..!

செய்முறை:

முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு, சனா பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 3 நிமிடங்கள் கழுவி ஊற வைக்கவும். அடுத்து, மிளகாய், சீரக விதை ஆகியவற்றை அரைத்து, தண்ணீரில் இருந்து வடிகட்டிய பருப்பை சேர்த்துக்கொள்ளவும். இதனை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூவை சேர்த்து ஒரு முறை தேவையான பதத்தில் அரைத்துக்கொள்ளவும். பின்னர், இதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, கலந்து வைத்துள்ள கலவையை உள்ளங்கையில் வடை செய்து, கடாயில் போடவும். நன்கு வெந்து பொன்னிறமாக வந்த பிறகு அதனை எடுக்கவும். அவ்வளவுதான் சுடச்சுட சுவையான வாழைப்பூ வடை தயார்.