Beetroot Vada (Photo Credit: YouTube)

ஜூலை 03, சென்னை (Kitchen Tips): மாலை வேளையில் வீட்டில் மொறுமொறுப்பாகவும், சூடாகவும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட விரும்பினால், வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு எப்படி வடை செய்து சாப்பிடுவது என்பதை இதில் பார்ப்போம். இந்த பீட்ரூட் வடை (Beetroot Vada) செய்வது மிகவும் சுலபம். இதனை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 50 கிராம்

பீட்ரூட் - சிறியது

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு. Cobra Swallowing A Medicine Bottle: மருந்து பாட்டிலை விழுங்க முயன்ற நாகப்பாம்பு; வலியால் துடிதுடித்த வீடியோ வைரல்..!

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின், ஊறவைத்த பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் மாவை சிறுசிறு உருளையாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் மிகவும் ருசியான மொறுமொறுப்பான பீட்ரூட் வடை தயார்.