ஜூலை 03, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் நாகப்பாம்பு (Cobra) ஒன்று, இருமல் மருந்து பாட்டிலை விழுங்கியுள்ளது. இந்த பாட்டில் அதன் தொண்டையில் சிக்கி மிகவும் சிரமப்பட்டது. இதுகுறித்து, பாம்பு ஹெல்ப்லைனிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், அதன் பொதுச் செயலாளர் சுபேந்து மல்லிக் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர், தனது வைத்திருந்த கொக்கி முனையால் நாகப்பாம்பின்கீழ் தாடையை மெதுவாக விரித்து பாட்டிலை வெளியில் எடுத்தார். பின்னர், அந்த நாகப்பாம்பைப் பிடித்துச் சென்று, நகருக்கு வெளியே இருந்த காட்டில் கொண்டுபோய் விட்டார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், 'நாகப்பாம்பு அதன் இரையென பாட்டிலை விழுங்கியுள்ளது. இதனால் அது தொண்டையில் சிக்கிக் கொண்டு வலியால் துடிதுடித்துள்ளது' என்றார். North Pacific Ocean Earthquake: வடக்கு பசிபிக் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)