ஜூலை 06, திருக்கோவிலூர் (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் சிலை பக்கத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. இதன்மூலமாக திருக்கோவிலூரின் முக்கிய பகுதியான வடக்கு தெருவுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. Female Employee Dies By Suicide: வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர்; விரக்தியில் ஐ.டி. பெண் ஊழியர் தற்கொலை..!
இந்நிலையில், இன்று (ஜூலை 06) அதிகாலை 4 மணியளவில் திடீரென இந்த மின்மாற்றி (Transformer) வெடித்து சிதறியதால் தீ பற்றி எரிந்தது. மின்மாற்றியில் இருந்த ஆயில் சிதறி அருகே இருந்த தெருவோர கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. இதுகுறித்து, தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 4 தெருவோர கடைகள், பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும், ஒரு தள்ளுவண்டி ஆகியவை முழுவதுமாக எரிந்து நாசமானது.
இதனையடுத்து, திருக்கோவிலூர் மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன்காரணமாக, திருக்கோவிலூர் பகுதி முழுவதும் சுமார் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.