ஜூலை 25, சென்னை (Kitchen Tips): காய்கறிகளில் அதிகமாக பயன்படுத்தும் இரண்டு வகை காய்கறிகளான கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை கொண்டு சுவையான கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Brinjal Potato Poriyal) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
கத்திரிக்காய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு உளுந்து - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 4 பல் (தட்டி எடுத்து கொள்ளவும்). Teenager Murder: கை துண்டித்து, தலை சிதைக்கப்பட்டு கொடூர கொலை; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், நறுக்கிய வைத்த தக்காளியை சேர்த்து அது நன்றாக மசியும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.
நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சிறிது நேரம் வதக்கி விட்டு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு வேகவைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு வெந்த பிறகு நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து, லேசாக அதிலிருக்கும் எண்ணையில் வதக்கி சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கவும். கத்திரிக்காய் வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்க்கவும்.
மசாலா தூள்களின் பச்ச வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.