மே 17, சென்னை (Kitchen Tips): கேரட் வைத்து இதுவரை ஜூஸ் செய்து பருகி உள்ளோம். மாலை நேரங்களில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் ஆக கேரட் போண்டா (Carrot Bonda) இருக்கும். எனவே, சுவையான கேரட் போண்டா எப்படி செய்து சாப்பிடுவது என்பதனை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கேரட் - 1 (பெரியது மற்றும் துருவியது)
மைதா - 1 கப்
பேக்கிங் சோடா - 2 மேசைக்கரண்டி
உலர் திராட்சை - 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. Courtallam Waterfalls Flood: பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 17 வயது சிறுவன் பலி..! காட்டாற்று வெள்ளத்தால் தெறித்தோடிய மக்கள்.!
செய்முறை:
முதலில் உலர் திராட்சையை சுடு தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர், ஒரு பவுலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, அதனுடன் உலர் திராட்சையையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியான பதத்தில் கலந்து கொண்டு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
பின், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கேரட் போண்டா ரெடி.