மே 17, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், கனமழை காரணமாக பழைய குற்றால அருவியில் (Old Courtallam Waterfall) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
17 வயது சிறுவன் மாயம்: இந்நிலையில், பழைய குற்றால அருவியில் தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், திடீர் வெள்ளப்பெருக்கில் (Flash Flood) சிக்கிக் கொண்டு அதில் அடித்துச் செல்லப்பட்டார். இதன்பிறகு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 5 பேரில், 4 பேரை அங்கிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றினர். Infinix GT 20 Pro: இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! புத்தம் புது பிராசஸ்சர் உடன் வெளியீடு..!
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் எஸ். பி. சுரேஷ்குமார் ஆகியோர் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதனிடையே ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்குள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவருக்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
#WATCH | Sudden flash flood in Old Courtallam waterfalls in Tamil Nadu's Tenkasi
The public is prohiitied from entering the waterfall temporarily. A team of Tamil Nadu Fire and rescue department is present on the spot. pic.twitter.com/lahkoPNjVp
— ANI (@ANI) May 17, 2024
சிறுவன் சடலமாக மீட்பு: இந்நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த ஸ்ரீகுமார், அருண், அரவிந்த் என்பவரின் குடும்பத்தினர் பழைய குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். இவர்களுடன் 17 வயதுடைய சிறுவன் அஷ்வினும் குளித்துக்கொண்டு இருந்த சமயத்தில், காற்றாற்று வெள்ளம் வரும் சில நொடிகளுக்கு முன் அஸ்வின் அரவிந்தின் அருகில் இருந்து தள்ளி சென்றுள்ளார்.
இதனால் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 17 வயது சிறுவன் அஸ்வினின் உடல் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கி எழும் குற்றாலம் #Tenkasi#Shencottah#Courtalumpic.twitter.com/t9PHYrTgoH
— Tenkasi Weatherman (@TenkasiWeather) May 17, 2024
வெள்ளம் வந்ததும் தெறித்தோடிய மக்கள்:
சீறி பாயும் வெள்ளம்
பயந்து ஓடும் மக்கள் ....
பழைய குற்றாலம் pic.twitter.com/ZT60PV1yjp
— Dhanalakshmi (@DhanalakshmiOff) May 17, 2024