ஜூலை 19, சென்னை (Kitchen Tips): மாலை நேரங்களில் பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு பிடித்தமான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆக காலிஃப்ளவர் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அந்தவகையில், திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் சுவை நிறைந்த காலிஃப்ளவர் பஜ்ஜி (Cauliflower Bajji) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 400 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
அரிசி மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி
கடலை மாவு - அரை கப்
கார்ன் ஃப்ளோர் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு. Minor Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்..!
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவர் பூக்கள் மூழ்கும் அளவு சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரை முழுவதும் வடிகட்டிக் கொள்ளவும்.
இதனை மீண்டும் ஒருமுறை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ஃப்ளோர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் கால் கப் தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக தெளித்து கெட்டியான பதத்தில் வைத்துக் கொள்ளவும். பின் 15 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், மிதமான சூட்டில் வைத்து ஒவ்வொரு பூக்களாக சேர்த்துக் கொள்ளவும்.
கீழ்புறம் லேசாக வெந்ததும் மெதுவாக திருப்பி எல்லா பக்கங்களிலும் மொறு மொறுப்பாகும் வரை பொரித்து எடுக்கவேண்டும். மொறு மொறுப்பான ருசியான காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்.