Chettinad Paal Paniyaram (Photo Credit: YouTube)

ஜூன் 20, சென்னை (Kitchen Tips): இனிப்பு வகைகளில் பெரும்பாலும், பால் பணியாரம் குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அதிலும், செட்டிநாடு ஸ்பெஷல் பால் பணியாரத்தை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் வயிறு நிறைவதோடு, அவர்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அந்தவகையில், செட்டிநாடு பால் பணியாரம் (Chettinad Paal Paniyaram) எப்படி செய்வது என்பது பற்றி இதில் பார்ப்போம். Two Dead Bodies In The Car: காரில் 2 பேர் தோட்டாக் காயங்களுடன் சடலமாக மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை..!

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் - 1 கப்

காய்ச்சிய பால் - கால் கப்

பச்சரிசி, உளுத்தம் பருப்பு - அரை கப்

ஏலக்காய் பொடி - கால் கரண்டி

சர்க்கரை - 3 மேசைக்கரண்டி

உப்பு - 1 சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தண்ணீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர், அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும். அந்த மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின், ஒரு பவுலில் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, பிறகு அதில் பொரித்து வைத்துள்ளதை சேர்த்து 5-10 நிமிடம் ஊறவைத்து பின்னர் அனைவரும் சாப்பிடலாம். சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி.