மே 09, சென்னை (Kitchen Tips): முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை நாம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, முகம் பொலிவு பெறும். இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள் அதிகம் உள்ளதால், இதனை உட்கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேற்கொண்ட பயன்களை அளிக்கக்கூடிய பலாப்பழத்தை கொண்டு எப்படி சுவையான கொழுக்கட்டை (Jackfruit Kozhukattai) செய்வது என்பது பற்றி இதில் பார்ப்போம். Realme GT Series: ரியல்மி ஜிடி சீரிஸ் அசத்தலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம்..! முழு விவரம் உள்ளே..!

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்

தேங்காய் துருவல் - அரை கப்

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

அவல், வெல்லம் - தலா 2 கப்

நெய் - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அவலை வறுத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின்னர், பலாப்பழத்தை துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து, ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

வடிகட்டிய அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுடன் அரைத்து வைத்த அவல், அரிசி மாவை சேர்த்து நன்கு கிளறவிடவும். பின், அதில் நெய், தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளறவிட வேண்டும்.

பிறகு, கொழுக்கட்டையாக பிடித்து, வேக வைத்தால் அவ்வளவுதான் சுவையான பலாப்பழ கொழுக்கட்டை ரெடி.