Realme GT Series (Photo Credit: @yabhishekhd X)

மே 09, சென்னை (Technology News): ரியல்மி நிறுவனம் தனது GT சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர், ரூ.30,000 பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கும் போது, ஒன்பிளஸ் மற்றும் சாம்சங் பிராண்ட்களில் தான் வாங்குகிறார்கள். ஆனால், தற்போது ரியல்மி பிராண்ட்களிலும் நல்ல பயன்பாட்டை அளிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களின் வருகையால், இதன் பக்கமும் வாடிக்கையாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில், ரியல்மி நிறுவனம் தனது ‘ஜிடி’ தொடரை இந்தியாவில், இந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட் போன் வர வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. Three Children Bitten By Rabid Dog: வெறி நாய் கடித்து படுகாயம்; 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!

ரியல்மி ஜிடி நியோ 6 (Realme GT Neo 6): இந்த வாரத்தில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட் போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் போனின் சில விவரக்குறிப்புகள் ஏற்கனவே நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கியமான சிறப்பம்சங்களை இதில் பார்க்கலாம்.

இதில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s Gen 3 octacore சிப்செட்டில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. 1TB சேமிப்பகத்துடன், 16GB RAM மற்றும் போனின் அடிப்படை மாறுபாட்டில், 8GB RAM, 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன், இது மிகப்பெரிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. முழு விவரங்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், வலுவான சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் வரலாம்.