ஜூன் 25, சென்னை (Kitchen Tips): மாலை வேலையில் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், சுவையான ஜவ்வரிசி வடையை செய்து கொடுக்கலாம். இந்த ஜவ்வரிசி வடை (Javvarisi Vada) வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பிரட் - 3
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Teenager Arrested And 5 Years Prison: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை..!
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை சுடுதண்ணீரில் சுமார் 2 மணிநேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
அதன்பின் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு நீரில் பிரட் துண்டுகளை நனைத்து எடுத்து, அதில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, ஜவ்வரிசியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின், கைகளால் நன்கு பிசைந்துகொண்டு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பிறகு, பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடை தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி வடை தயார்.