ஜூன் 07, சென்னை (Kitchen Tips): கவுனி அரிசி அதிகளவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதிலுள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பின் அளவு குறைக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மற்ற அரிசிகளுடன் ஒப்பிடும்பொழுது இதில், அதிகளவு புரதச்சத்து இருப்பதால் உடலின் தசைகளை உருவாக்குவதிலும் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றது. செட்டிநாட்டில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய கவுனி அரிசி அல்வாவாக செய்து தருவதன் மூலம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கவுனி அரிசி அல்வாவை (Kavuni Arisi Halwa) எப்படி செய்வது என்று இதில் பார்ப்போம். Vivo X Fold 3 Pro: விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
தேவையான பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி, வெல்லம், பால் - தலா 1 கப்
ஏலக்காய் பொடி - கால் கரண்டி
முந்திரி, திராட்சை - தலா 7
நெய் - சிறிதளவு
செய்முறை:
முதலில் கருப்பு கவுனி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின், இதனை குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் விடவும்.
நன்கு வெந்த பிறகு, ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, அதில் முந்திரி, திராட்சையை வறுக்க வேண்டும்.
பிறகு, அதே பாத்திரத்தில் வேகவைத்த அரிசி மற்றும் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் சேர்த்த பின் கொஞ்சம் இலகுவாகும். எனவே, இது கெட்டியாகும் வரை கிளறிவிடவும்.
பின்னர், அதில் பால் சேர்த்து கெட்டியான பிறகு நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி, வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் ஹல்வா போல் சரியான பதத்திற்கு கொண்டு வரவும். அவ்வளவுதான் சுவையான கருப்பு கவுனி ஹல்வா ரெடி.