ஜூன் 07, சென்னை (Technology News): விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ போனை (Vivo X Fold 3 Pro Smart Phone) இந்தியாவில் நேற்று (ஜூன் 6) அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் ரூ.1,59,999 விலையில் கிடைக்கும். ஆச்சரியம் அளிக்கும் வகையில், இந்த மொபைலுக்கு வேரியண்ட் வேறு ஏதும் இல்லை. AI திறன்களை கொண்ட விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ, இந்தியாவில் விவோ நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் மொபைலாக அறிமுகம் ஆகியுள்ளது. முன்னதாகவே, விவோவின் அதிகாரப்பூர்வ X-தள பக்கத்தில் இந்த மொபைலின் வெளியீட்டுத் தேதி வெளியாகி ஆர்வத்தைத் தூண்டியது. இது 256GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM கொண்ட ஒரே வேரியண்டில் மட்டும் உள்ளது. Heart Attack Prevention: மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..? விவரம் உள்ளே..!
சிறப்பம்சங்கள்:
இதில், 8.03-இன்ச் 2K E7 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டது. இந்த ஸ்கிரீனில் 4,500நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன் மற்றும் HDR10 ஆகிய அம்சங்களுடன் வந்துள்ளது. இது 6.53-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளேவையும், LTPO பேனலும் உள்ளது. அல்ட்ரா-தின் கிளாஸ் (UTG) ஸ்கீரின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது.
இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றது. கூடுதலாக, விவோவின் தனிப்பயன் V3 இமேஜிங் சிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன், 14.98 கிராம் எடையுள்ள ஒரு கார்பன் ஃபைபர் கீல் அறிமுகமாகின்றது. இது முந்தைய மாடலைவிட 37 சதவீதம் லேசானதாக இருக்கும். TUV ரைன்லேண்ட், இதற்கு 5,00,000 முறை ஃபோல்டு செய்வதைத் தாங்கும் சக்தி உண்டு என சான்று கொடுத்துள்ளது.
இதில், f/1.68 லென்ஸ் மற்றும் OIS உடன் 50MP பிரதான கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை அடங்கும். உள் மற்றும் வெளிப்புறத் திரைகள் இரண்டும் f/2.4 துளைகளுடன் 32MP செல்பி கேமராக்களைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில் Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக 3D அல்ட்ராசோனிக் இரட்டை கைரேகை சென்சார், ஃபேஸ் ஐடி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இது, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IPX8 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. 5,700mAh பேட்டரி திறனுடன், 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.