செப்டம்பர் 09, சென்னை (Kitchen Tips): பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுவர். அதுவும் சட்னியில் பொட்டுக்கடலை, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி என பல விதமாக செய்து சாப்பிடுவோம். அந்தவகையில், உருளைக்கிழங்கு (Potato Chutney) வைத்து ருசியான சட்னி எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
வர மிளகாய் - 2. Cooking Tips: சத்தான வாழைப்பூவில், சுவையான பிரியாணி செய்வது எப்படி?.. சமையல் ராணிகளே, அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக.!
தாளிக்க தேவையானவை:
சமையல் எண்ணெய் - அரை தேக்கரண்டி
எள்ளு - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
- முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின், அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்து கலவை, மிளகாய் தூள் போட்டு 3 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்னர் உருளைக் கிழங்கு, தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். அதில் தண்ணீர் அரை கப் ஊற்றி மிதமான தீயில் கடாயை மூடி வைத்து வேக வைக்கவும்.
- நன்றாக வெந்த தண்ணீர் வற்றி மசாலா வாசனை போனவுடன் இறக்கி வைத்து, மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எள்ளு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து உருளைக்கிழங்கு கலவையில் கொட்டி கிளறிவிட வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு சட்னி ரெடி. இது சப்பாத்தி, பூரி, தோசை, தயிர் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.