Banana Flower Biryani (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 09, சென்னை (Kitchen Tips): வாழையடி வாழையாக என்று தனக்கென தனியொரு அடையாளத்தை கொண்ட பூக்களில், மருத்துவ மூலிகை என வருணிக்கப்படும் வாழைப்பூவில் ஏராளமான எண்ணிலடங்காத சத்துக்கள் நிறைந்து கிடக்கின்றன. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, எலும்புகள் ஆரோக்கியம் மேம்பட, மாதவிடாய் பிரச்சனைகள் சரியாக, உடல் எடை குறைய, இரத்த சக்கரை அளவை சீராக்க, செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய, கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட, இரத்த சோகை நீங்க, மனநிலையை மேம்படுத்த, சரும பாதுகாப்பை அதிகரிக்க, மூளையின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க, பார்வைத்திறனை மேம்படுத்த, தொற்றுநோய்களை எதிர்த்து போராட, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற, மலச்சிக்கலை தீர்க்க என வாழைப்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என கூறிக்கொண்டே செல்லலாம். இன்றளவில் வாழைப்பூவை பெரும்பாலானோர் சாப்பிடுவது குறைந்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் பிரியாணி, நூடுல்ஸ் என்ற மோகத்தில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு, அவர்களின் பாணியிலேயே உணவை தரமானதாக பிரித்து சாப்பிட வழங்கினால், அவர்கள் அதனை கட்டாயம் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், இன்று சுவையான, சத்தான வாழைப்பூ பிரியாணி (Banana Flower Biryani) செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். Pacha Pattani Pulao: குழந்தைகளுக்கு பிடித்த வகையில், சுவையான பச்சை பட்டாணி புலாவ்; செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே செய்து அசத்துங்கள்.!

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1,

சீராக சம்பா / பாசுமதி அரிசி - 2 கப்,

பட்டை & கிராம்பு - 5,

ஏலக்காய் - 2,

பிரிஞ்சு இலை - 1,

சோம்பு - 1 கரண்டி,

கிராம்பு - 3,

பெரிய வெங்காயம் - 3,

தக்காளி - 3,

தயிர் - 1/4 கப்,

பச்சை மிளகாய் - 4,

இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு,

கரம் மசாலா - 1/2 கரண்டி,

பிரியாணி மசாலா - உங்களின் தேவைக்கேற்ப,

உப்பு - தேவையான அளவு,

புதினா & கொத்தமல்லித்தழை - கையளவு,

தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் - 4 கரண்டி,

நெய் - 4 கரண்டி,

முந்திரி - 10,

அரைப்பதற்கு:

சின்ன வெங்காயம் - 300 கிராம்,

முந்திரி - 12,

சோம்பு - 1 1/2 கரண்டி,

கசகசா - 1 1/2 கரண்டி,

கொத்தமல்லித் தழை & புதினா - பாதி கையளவு,

செய்முறை:

  • முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை தனியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அரிசியை தனியே அரைமணிநேரம் நீரில் ஊறவைத்து எடுக்க வேண்டும். வாழைப்பூவினை நரம்புகளை நீக்கி, இரண்டாக துண்டித்து நறுக்கி வைக்க வேண்டும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, பிரிஞ்சு இலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கியதும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கி, தயிர், அரைத்த பேஸ்ட் ஆகியவற்றை வதக்க வேண்டும். இவை வதங்கியதும் பிரியாணி மசாலா, கரம் மசாலா, உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • இவை வதங்கியதும் டம்ப்ளர் அரிசிக்கு 2 டம்ப்ளர் என நீர் சேர்த்து ஒரு கொதி வரும் வரை காத்திருக்க வேண்டும். பின் குக்கரின் மூடியை ஒருத்தி 1 விசில் வந்ததும் இறக்கினால், சுவையான வாழைப்பூ பிரியாணி தயார். இறக்கும் தருவாயில் நெய் சேர்த்து கிளறி கொத்தமல்லித்தழைகளை தூவி பரிமாறலாம்.