அக்டோபர் 29, சென்னை (Kitchen Tips): தீபாவளி பண்டிகை (Diwali) நெருங்கிக் கொண்டிருப்பதால், பலவிதமான பலகார வகைகளை செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். அதில், எளிய முறையில் சுலபமாகவும், அதே சமயம் சுவையாகவும் நிறைய கார வகைகளை செய்ய விரும்பினால், ரிப்பன் பக்கோடாவை செய்யலாம். இந்த ரிப்பன் பக்கோடா (Ribbon Pakoda) செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மொறுமொறுவென்று சுவையாகவும் இருக்கும். இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். Varagu Ukkarai Recipe: தீபாவளி ஸ்பெஷல்! வரகு உக்கரை செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - கால் கப்
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
எள்ளு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில், கடலை மாவை சலித்து சேர்க்கவும்.
- அதன் பின் பொட்டுக்கடலை மாவை சேர்த்து, பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, அதன் பின் எள்ளு விதைகளை கைகளால் கசக்கி சேர்க்க வேண்டும்.
- பிறகு, எண்ணெயை 1 மேசைக்கரண்டி ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறிவிட்டு, பின் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு பிசைந்து கிளறி விடவும்.
- அதன் பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, மிகவும் இறுக்கமாக இல்லாமல், மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
- பின்பு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் ரிப்பன் பக்கோடா அச்சை வைத்து, பின் பிசைந்த மாவை வைத்து, எண்ணெயில் நேரடியாக பிழிந்துவிட்டு, பொரித்து எடுத்தால், சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி.