மார்ச் 05, சென்னை (Kitchen Tips): தினமும் இட்லி, தோசை போன்றவை சாப்பிட்டு சலித்து போய்விட்டதா? ஏதேனும் புது ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்தால். தோசை வைத்து சுவையான முட்டை கொத்து தோசை செய்யலாம். இரண்டு புரோட்டோவை பிய்த்து போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி சால்னாவை சேர்த்து கரண்டியால் கொத்தி கொடுக்கப்படும் கொத்து புரோட்டாவை ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, புரோட்டாவைப் போலவே நாம் தோசையையும் கொத்து தோசையாக சாப்பிடலாம். வீட்டிலேயே சூப்பரான முட்டை கொத்து தோசையை செய்து சாப்பிடலாம். அப்படிப்பட்ட காரசாரமான முட்டை கொத்து தோசை (Egg Kothu Dosa) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம். Sweet Bonda Recipe: சுவையான ரவை மைதா போண்டா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
ஊத்தாப்ப தோசை - 3
குருமா - 5 கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 2 கரண்டி
கரம் மசாலா - அரை கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நாறுக்கிக் கொள்ளவும்.
- அடுத்து, அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் சேர்த்து, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
- வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கிய பின் இரண்டு முட்டையை உடைத்து அதில் சேர்த்து நன்கு வதக்கவும். முட்டை வதங்கிய பின் சிறிதளவு உப்பு, கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும்.
- பின், ஊத்தாப்பத்தை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து அதில் சேர்த்து, குருமாவையும் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது குருமா மற்றும் ஊத்தாப்பம் இரண்டையும் சேர்த்து தோசை கரண்டி வைத்து நன்றாக கொத்தி கொத்தி விட வேண்டும்.
- இரண்டும் நன்றாக கலந்து பின் இந்த கலவை நன்கு ட்ரை ஆனதும், இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் முட்டை கொத்து தோசை ரெடி. இதில், தேவைப்பட்டால் 1 கரண்டி மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையை அதிகரிக்கும்.