ஜூன் 26, சென்னை (Kitchen Tips): கேரளா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்கும் எனில், வீட்டில் கேரளா ஸ்டைல் கடலை கறியை செய்து சாப்பிடலாம். இந்த கேரளா கடலை கறி (Kerala Kadala Curry) சப்பாத்தி, சாதம், பூரி, அப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி ருசியாக செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
வெங்காயம் - 3
தக்காளி - 2
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
சோம்பு, கடுகு - 1 கரண்டி
மஞ்சள் தூள் - அரை கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
தனியா தூள், காஷ்மீரி மிளகாய் தூள் - 2 கரண்டி
துருவிய தேங்காய் - அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. Physically Inactive Indians: உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்தே இருக்கும் இந்தியர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை சுமார் 8 மணிநேரம் நன்றாக ஊறவைத்து, குக்கரில் கடலையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மசியும் அளவிற்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு, அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து வறுத்து, அதனுடன் வெங்காயத்தையும் இஞ்சி பூண்டுயும் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளியையும் சேர்த்து மசியும் அளவிற்கு வதக்கி, மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து, தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். School Boy Suicide: பள்ளிக்குச் செல்ல மறுத்த மகனை கண்டித்த பெற்றோர்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!
பச்சை வாசனை போக நன்றாக வதங்கியதும், அதை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்ஸியில் சிறிதளவு கொண்டை கடலையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, கடாயில் 3 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கடுகு தாளித்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு, கொண்டைக் கடலையுடன் சேர்த்து தண்ணீரையும் மசாலாவில் விட்டு அரைத்த கடலை சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது, இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கேரளா கடலை கறி தயார்.